ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய அவகேடோ

வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் அவகேடோ, தோல் ஆரோக்கியத்திற்கான ஊட்டச்சத்து நிறைவை உள்ளடக்கியது. இந்த பழம் பயோட்டின் என்னும் வைட்டமின் சத்தின் மிகப்பெரிய மூலமாகும்.

இது தோல் வறட்சியை தடுப்பதோடு, ஆரோக்கியமான தோல் செல்கள் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இப்பழத்தின் சாறு அல்லது மில்க் ஷேக் (Milk shake) தினமும் மூன்று அல்லது நான்கு முறை எடுத்துக் கொண்டால், வறண்ட சருமத்தில் வியத்தகு மாற்றம் ஏற்படுகிறது.

இந்த பழத்தில் பீட்டா சிடோஸ்டெரால் அதிகளவில் உள்ளதால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இப் பழம் வெகுவாக குறைக்கும்.

அவகேடோ பழத்தில் லுடீன் என்ற ஆன்டிஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகோடோவில் உள்ளது.

கர்ப்பிணிகள் இதைச் சாப்பிட்டு வந்தால், பிறக்க போகும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்களுக்கு பக்கவாதம் வராமல் தடுக்கும்.

ஆன்டிஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ரோஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.

மூப்படைதலை தடுத்து இளமையை தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் செல்களை சேதமடையாமல் பாதுகாக்கும்.

இவ்வாறு பலவகையான நன்மைகளை அவகேடோ உண்பதன் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம்.

Add Comment