திருமணத்தில் மணமக்களுக்கு பட்டாடை அணிய சொல்வதன் காரணம் …

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு சில குணம் உண்டு.அது  என்னவென்றால், பட்டானது எளிதில் சில நல்ல கதிர்களை கிரகித்துக்  கொள்வதோடு
தீய கதிர் வீச்சுகளை உள்ளே அனுமதிக்காது தடுத்து நிறுத்தும் பண்பும் உண்டு. எவ்வகையான துணிக்கும் இல்லாத சிறப்பு பட்டு சரிகைக்கு மட்டுமே உள்ளது.

திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருவார்கள், அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் ஆரோக்கியம் அளிக்கும் வகையில் பட்டை அணிய சொன்னார்கள்.

கோவில்கள் மற்றும் அனைத்து நல்ல விடயங்களுக்கு செல்லும்பொழுது ஏன் பட்டு அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. இது தொடர்பாக சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும், இதில் வருத்தம் அளிக்கும் விடயம் என்னவென்றால், நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

Add Comment