டிஜிட்டல் பிச்சைக்காரர்கள்!

உலகம் ரொம்பவே நவீன மயமாகி விட்டது. அதிலும், உலக நாடுகளில்  சீனா தொழில்நுட்ப வளர்ச்சியில் உச்சத்தை தொட்டு விட்டது.

சீனாவில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்களில், பிச்சைக்காரர்கள் அதிக அளவில் உள்ளனர். சீனாவில், பணப் பரிமாற்றம் இப்போது டிஜிட்டல் மயமாகி விட்டதால், மிக குறைவானவர்கள் மட்டுமே, கரன்சி மற்றும் நாணயங்கள் வைத்திருக்கின்றனர். இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள், இப்போது, ‘ஸ்வைப்பிங் மிஷின்’ வாங்கி வைத்துள்ளனர்.

பிச்சை எடுக்கும் இடங்களில், தங்களுக்கு அருகிலேயே இந்த மிஷினை வைத்துள்ளனர். பிச்சை போடுவோர், தங்கள் கார்டுகளை இந்த மிஷினில் தேய்த்து, கொடுக்க விரும்பும் பணத்தை அதில் பதிவு செய்தால் போதும், பிச்சைக்காரரின் வங்கி கணக்கிற்கு, அந்த பணம் சென்று விடும்.

Beggars-now-accepting-mobile-payments-in-china

Add Comment