சிக்கன் பிரியர்களின் கவனத்திற்கு……

இன்று அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவம் எது என்றால், அது சிக்கனாகத்தான் இருக்கும். விதவிதமாக சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாக உள்ளது. உலக அளவிலும் அதிகமான  அசைவ பிரியர்கள்  சிக்கனைத்தான் விரும்புகிறார்கள்.

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த சிக்கனில்  சில கெடுதல்களும் உள்ளன. அடிக்கடி சிக்கன் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்தது தான்.இருப்பினும் இதைவிட மிக முக்கிய தகவல் உள்ளது.

அமெரிக்காவின் மிக்சிகன் மாகாண பல்கலைக்கழக நிபுனர் லிண்டா மேன்ஸ்பீல்டு ஒரு ஆய்வினை மேற்கொண்டார். குறைவாக வேக வைத்த சிக்கன் சாப்பிடுவர்களின் உடல் நிலையை ஆராய்ந்தார். அதில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

அரை வேக்காடு நிலையில் அதாவது,அரை குறையாக சமைத்து சாப்பிட்டால் உங்களுக்கு ‘பக்கவாதம்’ ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். நன்றாக வேக வைக்காத கோழிக்கறியில் தான் ‘ஜி.பி.எஸ்.’ எனப்படும் ‘குயிலன் பேர் சின்ட்ரோம்’ பேக்டீரியா இருக்கும். அவை நரம்பு செல்களில் புகுந்து சிறிது சிறிதாக அவற்றை செயல் இழக்க செய்யும் தன்மை வாய்ந்தது. எனவே,நன்கு வேக வைத்த சிக்கனை சாப்பிடுவதே சிறந்தது என அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment