மாதவிடாய் சுழற்சியை சீராக்க ஆரோக்கியமான உணவுகள் ஐந்து!

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பெரும் பிரச்சினையாக உள்ளது.இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால்,அந்த தாமதம் சிலருக்கு இரண்டு மாதங்கள்வரை  தள்ளிப்  போகும். இத்தகைய பிரச்சனையால் பிற்காலத்தில் அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக, மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துகள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன. அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே,இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும் தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும் ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம்.இதிலிருந்து தப்பிக்க சில ஆரோக்கியமான உணவுகளை உண்டாலே போதும்.

இதோ அந்த உணவுகளின் பட்டியல்:

பச்சை  காய்கறிகள்,கீரைகள்

ஊட்டச் சத்து நிறைந்த பச்சைக்  காய்கறிகள்,கீரைகள் என்பவற்றை உணவுடன் சேர்த்து உண்பது பெண்களுக்கு மிகவும் நல்லது.இதனால் மாதவிடாய் சுழற்சி சீராக நடைபெறும்.

  எள்

எள்ளை அளவாக உட்கொண்டு வந்தால் அது உடல் வெப்பத்தை சற்று அதிகரித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

சீரகம் 

சீரகத்தை  தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சீரகத்தை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

மீன் அல்லது மீன் எண்ணெய்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே,மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம்

பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

Add Comment