உலகில் அமைந்துள்ள ஆபத்தான இடங்கள்

அழகு இருக்கும் அனைத்திலுமே ஆபத்தும் இருக்கும். அதற்கு உதாரணமாக அழகான, ஆபத்தான இடங்களும் உலகின் அமைந்துள்ளன அந்தவகையில், உலகின் ரசிக்கக்கூடிய ஆனால் மரணத்தை விளைவிக்கும் மிக ஆபத்தான இடங்கள் குறித்து பார்ப்போம்.

மரண பள்ளத்தாக்கு (Death Valley)

DeathValley

கலிபோர்னியாவில் உள்ள இந்த இடம் தான் உலகின் மிக அதிக வெப்ப நிலை உடைய இடமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 86 மீட்டர் அடியில் உள்ளது. ஆனால் இந்த பள்ளத்தாக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான வெப்பநிலையை கொண்டது. இந்த இடத்தில் உலகிலேயே அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த இடம் அழகான இடம் மட்டும் அல்ல. அதேநேரம் இந்த இடத்திற்கு நீங்கள் திரில் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தாராளமாக செல்லலாம். உணவோ, தண்ணீரோ எதுவுமே கிடைக்காது. அதனால் தாகத்தை கூட தீர்த்துக்கொள்ள முடியாமல் தொண்டை வறண்டுவிடும்.

 

ஹால்ப் டோமே (Half Dome)

half-dome

ஹால்ப் டோமே மிக அழகான அருமையான ஒரு மலைச்சிகரம். ஆனால் இங்குச் செல்வது உங்களுக்கு சவாலாக இருக்கும். ஏனெனில் கடல் மட்டத்தில் இருந்து 8,800 அடி உயரத்தில் இருக்கிறது. இந்த ஹால்ப் டோமே சிகரத்திற்கு செல்லும் போது நீங்கள் தவறாக ஒரு அடி எடுத்து வைத்தாலும் உங்கள் உடலின் ஒரு பாகம் கூட யாருக்கும் கிடைக்காது.

மரண சாலை (death road)

Death-Road-600x399

உலகின் மிகஆபத்தான சாலை அமைந்துள்ள இடம் பொலிவியா. இந்த மரண சாலையின் நீளம் 61 கிலோ மீட்டர். இந்த இடம் பைக் ரைடர்களின் பிரியமான இடம். 11,800 மீட்டர் உயரம் வரை உங்கள் பயணம் இருக்கும். செல்லும் சாலைகள் பனியால் மூடப்பட்டு காணப்படும் என்பதால் எதிரில் என்ன உள்ளது என்பதே தெரியாது.

இதனால் பயணம் முழுமையும் திரில்லாகவே இருக்கும். ஆண்டுக்கு 200 முதல் 300 பேர் வரை இந்த சாலையில் உயிரிழக்கிறார்கள். இந்த மலையில் பாம்புகள், கிளிகள், குரங்குக்ள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் அதிக அளவில் உள்ள வனப்பகுதியாகும். இவ்வளவு ஆபத்தான பயணத்தை உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மேற்கொள்ள விரும்புகிறார்கள்.

Death road

 

பாம்புத் தீவு ( Snake Island)

அட்லாண்டிக் பெருங்கடல் பகுதில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்திலிருந்து ஏறத்தாழ 33 கி.மீ. தொலைவில், 4,30,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது இந்த பாம்புகள் தீவு!

இந்தத் தீவில் நீங்கள் கால் வைக்கும் ஒவ்வொரு நான்கடிக்கும் ஒரு பாம்பு இருக்கும். அதிலும் கோல்டன் பிட் வைப்பர் என்ற பாம்பு வகையே இங்கு அதிகளவில் இருக்கிறது என அறியபடுகிறது.

உலகில் மனிதர்கள் வாழ்வதற்கும், சுற்றுலா செல்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ள இடங்களில் இந்தத் தீவும் ஒன்றாகும்.

Snake island

 

மவுண்ட் வாஷிங்டன் (Mount Washington, USA)

Mt-Washington

மவுண்ட் வாஷிங்டனின் உச்சி காற்றலைகள் பூமியின் மேற்பரப்பில் வேகமாகப் பாய்ந்து வருவதற்கான உலக சாதனையைக் கொண்டுள்ளது. இங்கு அதிகபட்ச காற்றலைகள் வேகம் மணி நேரத்திற்கு 203 மைல்கள் (327 கிமீ / மணி) ஆகும். மவுண்ட் வாஷிங்டன் உலகின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும்.  அதன் சாதாரண உயரம் – 6,288 அடி (1,917 மீட்டர்). -40 டிகிரி செல்சியஸ் மற்றும் தொடர்ச்சியான கடுமையான பனிப்பொழிவு வாஷிங்டன் மவுண்ட்டை  மிகவும் ஆபத்தான இடமாக அறியவைத்துள்ளது.

 

Add Comment