நைட் ஷிப்ட் செய்பவரா நீங்கள்?

இன்றைய காலகட்டத்தில் நைட் ஷிப்ட் என்பது ஆண், பெண் இருபாலாருக்கும் சர்வ சாதாரணமாகி விட்டது. மற்றைய நேரத்தை விட நைட் ஷிப்டில் அதுவும் IT துறையானது கைநிறைய சம்பளம் தருவது என்பதால் பலர் தூக்கத்தை இழந்து நைட் ஷிப்டில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து உளவியல் மருத்துவர் ஒருவர் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளது என்னவென்றால் இரவு 11 மணிக்கு மேல் விழித்திருப்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை….

sleepless night work stress

அதாவது இரவு 11 மணிக்குள் நல்ல இருள் உள்ள இடத்தில் தூங்கினால் மட்டுமே மேலோட்டலின் என்ற ஹார்மோன் (melanin hormone) நமது உடலில் சுரக்குமாம். இந்த ஹார்மோன் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இந்த ஹார்மோனை எந்த மாத்திரை மருந்துகளாலும் தர முடியாது என்பதும் இதை இரவு தூக்கத்தில் மட்டுமே பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரவு ஷிப்டில் வேலை செய்துவிட்டு, பகலில் தூங்குபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை என்பதால் இவர்களுக்கு படிப்படியாக சிறுசிறு நோய்கள் வந்து 40 வயதுக்கு மேல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Add Comment