பூமியை நோக்கி வேகமாக வரும் விண்கல்! என்ன செய்ய காத்திருக்கிறது?

இரு வாரங்களுக்கு முன் பூமிக்கு அருகில் வித்தியாசமான விண்கல் ஒன்று தென்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சிகரெட் வடிவில் இருக்கும் இந்த விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது. இதன் அளவு 400 மீட்டர் நீளம் மட்டுமே உள்ளது. மேலும் ஒருபக்கம் முழுக்க சிவப்பாகவும் ஒரு பக்கம் முழுக்க கறு ப்பாகவும் இருக்கிறது. இந்த விண்கல் கண்டிப்பாக சூரிய குடும்பத்திற்கு சொந்தமான விண்கல் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக பூமிக்கு சொந்தம் இல்லாமல் வானத்தில் பறந்த முதல் பொருள் இதுதான்.குறித்த விண் கல்லானது எரிநட்சத்திரம் போல் இல்லாமல் பறக்கும் விண் கல் போன்று உள்ளது. எனவே, இது நிச்சயமாக சூரிய குடும்பத்தை சேர்ந்ததாக இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ‘ஒமுஅவுமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘ஒமுஅவுமா’ விண் கல்லானது தற்போது பூமியை நோக்கி நெருங்கி வந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டீபன் ஹாக்கிங் தலைமையிலான குழு இந்த விண்கல் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. அவர்கள் இந்த விண்கல் ஏலியனாக இருக்கலாம் என்ற சந்தேசத்தில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். எப்போதும் ஏலியன் குறித்து வெளியாகும் தகவலை போல் வதந்தியாக இல்லாமல் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.எனவே,இதற்காக சில சிக்னல்கள்  அனுப்புவதற்கு    திட்டமிடப்பட்டுள்ளது .அனுப்பப்பட்ட சிக்னல்களுக்கு பதில் வரும் பட்சத்தில் அது ஏலியனாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

Add Comment