இலங்கைக்கு அருகில் இருக்கும் ஆபத்தான தீவு!

இலங்கைக்கு கிழக்கு பக்கத்தில் இந்தியப் பெருங்கடலில் அழகான சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இலங்கைக்கு அருகிலேயே இந்த தீவு அமைந்துள்ள போதிலும் அங்கு எந்தவொரு சுற்றுலா பயணியும் செல்ல முடியாதென தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ள இந்த தீவானது சர்வதேச ரீதியாக சுற்றுலாவுக்கான ஆபத்தான தீவாக கருதப்படுகின்றது.நோர்த் சென்டினேல் (North Sentinel island) என பெயரிடப்பட்டுள்ள இந்த தீவில் ஒரு சில பழங்குடியின குழுக்கள் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

North Sentinel island sea side
சுற்றுலா பயணிகள் அல்லது பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத இந்த தீவின் பழங்குடியினர் பார்வையாளர்களை தாக்குவதற்கு அஞ்சுவதில்லை என குறிப்பிடப்படுகின்றது. உணவு அல்லது வேறு எந்தவொரு பொருள் வழங்கினாலும் பார்வையாளர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளாத அவர்கள் கட்டுக்கடங்காத குழுக்களாகும் என குறிப்பிடப்படுகின்றது.

Add Comment