அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அதிரடி: ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டு விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. இதேபோல் பந்தை சேதப்படுத்திய பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை பிறப்பித்துள்ளது. இதனால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபில் 11-வது சீசனில் விளையாட முடியாது என ஐபில் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவித்துள்ளார்.

smith-warner Australia cricketers

முன்னதாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது  டெஸ்ட் போட்டியின்போது அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக பதிவாகியிருந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர். ஆஸி., வீரர்களின் இந்த செயலுக்கு அந்நாட்டு பிரதமர் கண்டனம் தெரிவித்திருந்தார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தொடர்புடைய ஸ்டீவ் ஸ்மித்தின் தலைவர் பதவியும் வார்னரின் துணைத் தலைவர்  பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பான்கிராப்ட் ஆகியோர் தென்ஆபிரிக்கா தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் சபை  உத்தரவிட்டுள்ளது.

Add Comment