திருமண நாளில் இரட்டை சதமடித்து மனைவிக்கு சமர்ப்பணம் செய்த ரோஹிட்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு  ரோஹித் ஷர்மா அடித்த இரட்டை சதம் சாதனை ஆனதைவிடவும் அவர் தன் திருமண நாளன்று, மனைவி ரித்திகா சஜ்தேக்கு தன் சாதனையை சமர்ப்பணம்  செய்ததுதான் அனைவராலும் பரவலாக பேசப்பட்டது. அந்த அழகான தருணத்தை சமூகவலைத்தளங்களில் பலரும் கண்டு ரசித்தனர்.

இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், ரோஹித் ஷர்மா 191 ஓட்டங்கள்எடுத்த நிலையில், அந்த இன்னிங்ஸ் முடிய ஒரே ஒரு ஒவர் மட்டுமே இருந்தது. இந்த பரபரப்பான சூழலை புரிந்துகொண்ட ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே (Ritika Sajdeh) கண்கலங்கி நிற்க, சிறப்பாக  ஆடி 17 ஓட்டங்கள்எடுத்து, மொத்தமாக  208 ஓட்டங்கள் எடுத்தார்  ரோஹித். தன் வெற்றியை நிச்சயதார்த்த மோதிரத்தை முத்தமிட்டு அதை அப்படியே காற்றில் பறக்கவிட்டு மனைவிக்குத் தன் வெற்றியை சமர்ப்பணம்  செய்தார் ரோஹித். மைதானத்திலிருந்த அனைவரும் நெகிழ, கண்கலங்கி மகிழ்ந்தார் ரித்திகா சஜ்தே!

இரட்டை சதம் அடித்து பிறகு, ரோஹித் பேசுகையில், “இந்த விசேட  நாளில், என் மனைவி என்னுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இரட்டை சதம்தான் எங்கள் திருமண நாளுக்கு, நான் அவளுக்கு அளிக்கும் பரிசு. எப்போதும், எனக்கு பலம் சேர்ப்பவள் அவள். இந்த விளையாட்டில், நிறைய மன அழுத்தங்கள் இருக்கும். என் மனைவி என்னுடன் இருப்பதால்தான் அவற்றை எல்லாம் கடந்துவருகிறேன்”என நெகிழ்ந்து கூறினார் ரோஹித் ஷர்மா.

Add Comment