அறிமுகமாகின்றது புதிய கிரிக்கெட்

கிரிக்கெட் உலகிற்கு புதுவகை கிரிக்கெட் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் இருந்து 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியாக மாற்றமடைந்து தற்போது இருபதுக்கு இருபதாகவும் சுருக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பத்து ஓவர்கள் கொண்ட லீக் தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்கி 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப் போட்டித்தொடரில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்ட நாயகன் சேவாக் தலைமையில் ‘மார்தா அரபியன்ஸ்’அணியும் பங்குபற்றவுள்ளது.

இந்த அணி சார்பில் இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககார உட்பட பாகிஸ்தான் அணியின் கம்ரான் அக்மல் மற்றும் அமீர் ஆகியோரும் விளையாடவுள்ளனர்.

#KumarSangakkara #VirenderSehwag #ShahidAfridi #EoinMorgan #MisbahulHaq #FakharZaman

Add Comment