வதந்தியை நம்ப வேண்டாம் – உமர் அக்மல்

பயிற்சியாளருடனான முறுகலையடுத்து பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் (Umar Akmal) மரணமடைந்து விட்டதாக  சமூக வலைத்தளங்கள் பலவற்றில் திடீரென தகவல்கள் பரவிவருகின்றன.

இது அவரது ரசிகர்களிடையே பலத்த கவலையை உண்டுபண்ணி வரும் அதேவேளை, அவர் தனது டுவிட்டரில் காணொளியொன்றை பதிவிட்டிருக்கின்றார்.

அக் காணொளியில் ”கடவுளின் ஆசியால் நான் நலமுடன் உள்ளேன்.வலைத்தளங்களில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்,இது போன்ற தவறான செய்திகளை யாரும் பரப்பாதீர்கள்”எனக் கூறியுள்ளார்.

Add Comment