ஓய்வு பெறும் சைத் அஜ்மல்

The Pakistan world famous baler Sajeed Aajamalபாகிஸ்தான் அணியின் சுழல் பந்து வீச்சாளர் சைத் அஜ்மல் கிரிக்கெட்    போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

உலகின் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான  சைத் அஜ்மல் (40வயது), இம் மாதம் நிறைவடையவுள்ள பாகிஸ்தான் தேசிய 20-20 கிண்ண போட்டித் தொடருடன் ஓய்வு பெறவுள்ளார். விதி முறைகளுக்கு முரணாக பந்து வீசிய குற்றச்சாட்டால் போட்டிகளில் பங்கேற்க சிறிது காலம் தடை விதிக்கப்பட்ட அஜ்மல்,பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உதவியுடன் தனது பந்து வீச்சு பாணியை சீர்செய்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்றார். இருந்த போதும் முன்னர் போன்று அவரால் பந்து வீச முடியாமையால்  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் உள்ளூர் போட்டிகளில் அதிகம் பங்குபற்றினார்.

35டெஸ்ட்போட்டிகளில் 178விக்கற்றுகளை கைப்பற்றிய அதேவேளை, 113ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 184 விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.64 சர்வதேச 20-20கிண்ண   போட்டித்தொடர்களில் 85விக்கற்றுகளை கைப்பற்றியுள்ளார்.

ஓய்வின் பின்னர் இஸ்லாமாபாத் ஜுனைடெட் அணியின் சுழல் பந்து வீச்சு பயிற்சியாளராக கடமையாற்றப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Add Comment