நெகிழ வைத்த இலங்கை கிரிக்கெட் வீரர்

ஜமேக்காவைச் சேர்ந்த கிரிக்கெட்  வீரர் ஒருவருக்கு   தனது பாதணியை கொடுத்து அனைவரையும் நெகிழ வைத்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ (Asitha Fernando).

மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் A அணியானது மேற்கிந்திய தீவுகள் A அணியுடன்  மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் தொடர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இலங்கை வீரர்கள் இத் தொடருக்காக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை ஜமேக்காவைச் சேர்ந்த  வீரர் ஒருவர் இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு பந்து வீசிய போது  அவரால் ஒழுங்காக பந்து வீச முடியவில்லை . இதற்கு   காரணம்  அவரது  இரப்பரால் ஆன சீரற்ற பாதணிகளே என்பதை அவதானித்த இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ,சர்வதேச  அளவில் கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்த தனது பாதணிகளை அவருக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்ற அதேவேளை   இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோவின் இச்    செயற்பாடானது     அனைவரதும்   மனதை   நெகிழ வைத்துள்ளது.

AsithaFernando giving his shoes to another Jamaika cricketer

Add Comment