திடீர் தலைவலியை போக்க சில டிப்ஸ்

ஒற்றைத் தலைவலியால் (Migraine headache) அவதிப்படுகிறவர்கள் தற்போது மிக அதிகம். இரத்தநாளங்களை அழுத்தமாகத் துடிக்கச் செய்கிற, தலையின் ஒருபகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற, வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய, சூரிய ஒளியைக் கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள்.

அலுவலகம், வீடு, பயணம் என எப்போது வேண்டுமானாலும் நமக்கு ஏற்பட்டுவிடும் இந்த திடீர் தலைவலியை போக்கும் சில எளிய வழிமுறைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

சிறந்த கை மருந்துகள்:

இஞ்சி (Ginger)

ginger
தலையில் உள்ள இரத்த குழாய்களில் ஏற்படும் சிறு வீக்கங்களை எதிர்த்து போராடும் வல்லமை பெற்றது இஞ்சி. அதை ஜூசாகவோ அல்லது லெமன் ஜூசுடன் சேர்த்தும் பருகலாம். அவ்வாறு இஞ்சியை சாறாக சேர்த்துக்கொள்வதால் தலைவலியை போக்க முடியும்

தேன் (Honey)

honey-jar
உங்களுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் யோசிக்காமல் காலை எழுந்தவுடன் 1 டம்ளர் சுடு தண்ணியில் 1 ஸ்பூன் தேனை கலந்து குடித்திடுங்கள்.

அப்படி ரெகுலராக செய்து வந்தால் நிச்சயம் நல்ல மாற்றம் கிடைக்கும். தேனில் பொட்டாசியமும் மெக்னீசியமும் அதிகம் நிறைந்துள்ளதால் இயற்கையாகவே அது நம் உடலின் விட்டமின் சக்திகளை அதிகரித்திடும்.

ஆப்பிள் (Apple)

Apple
ஆப்பிளை வெட்டி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள், நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை உணர்வீர்கள். உப்புடன் ஆப்பிள் சேர்த்து சாப்பிட்ட பின் சுடு தண்ணீர் குடிப்பது அவசியம்.

பாதாம் (Almond)

almondsnutrition
தலைவலி ஏற்படும் அறிகுறி தெரிந்தால் மாத்திரைக்கு பதில் சில பாதாம் பருப்புகளை சாப்பிட்டாலே போதும். தலைவலி பறந்து போகும்.

துளசி (Holy Basil)

holy_basil
இயற்கை வலி நிவாரணியாக அறியப்படும் துளசியில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. தலைவலி ஏற்பட்டால் சிறு அளவு சுடுநீரில் தேனுடன் நான்கு துளசி இலைகளை சேர்த்து சாப்பிட்டால் தலைவலி நீங்கி புத்துணர்ச்சி கிடைத்திடும்.

Add Comment